Friday, October 09, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

01

எனக்குள் நேராய்
தொங்கும் வெளவால்கள்
நான் தலைகீழாய்
இருப்பதாய்
பரிகசித்துப் பறக்கின்றன

02

நான் இறந்த செய்தி கேட்டு
பார்க்க வந்த
முதல் நண்பர்
சிந்திக் கொண்டிருந்தார்
என் கண்ணீரை

03

…65…64…63
என எண்களைச்
சுருக்கிக் கொண்டே வருகிறது
வெடிகுண்டு

சீக்கிரம் ஓடிப்போய்
தொலைக்காட்சி பெட்டிமுன்
அமர்ந்து கொள்ளுங்கள்

சேதாரங்கள் சோகங்கள்
உங்களுக்கு
'லைவ்' வாக வரும்

13 comments:

  1. //எனக்குள் நேராய்
    தொங்கும் வெளவால்கள்
    நான் தலைகீழாய்
    இருப்பதாய்
    பரிகசித்துப் பறக்கின்றன//

    அருமை !!

    //சீக்கிரம் ஓடிப்போய்
    தொலைக்காட்சி பெட்டிமுன்
    அமர்ந்து கொள்ளுங்கள்
    சேதாரங்கள் சோகங்கள்
    உங்களுக்கு
    லைவ் வாக வரும் \\

    வேதனை!!


    நன்றாக எழுத வருகிறது.. கலக்குங்கள்!!! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. //எனக்குள் நேராய்
    தொங்கும் வெளவால்கள்
    நான் தலைகீழாய்
    இருப்பதாய்
    பரிகசித்துப் பறக்கின்றன//

    மனிதர்களும் கூட......

    ReplyDelete
  3. //நான் இறந்த செய்தி கேட்டு
    பார்க்க வந்த
    முதல் நண்பர்
    சிந்திக் கொண்டிருந்தார்
    என் கண்ணீரை//

    நட்பின் துளி தெறித்து வீழ்வதாய் உணர்கிறேன்.

    ReplyDelete
  4. அழகான வரிகள்...

    நினைவில் நிற்கின்றன......

    அன்புடன்
    ஆரூரன்

    ReplyDelete
  5. நல்லா இருக்கு சார்...

    ReplyDelete
  6. சந்திரா,வேலைப்பளு.வந்து எல்லாம் வாசித்திருக்கிறேன்.கண் நிறைவுடன் போகிறேன்.எப்பவும் போல்!

    ReplyDelete
  7. மிகுந்த இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்கள் கவிதைகளைப் படிக்கிறேன். அனைத்தும் அருமை. என்னுள் கல் விட்டெறிந்தது முதல் கவிதை!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. நீண்ட நாட்கள் பின்பு உங்களுக்கு பின்னூட்டம் இடுகிறேன்.
    சித்தனின் வார்த்தைகள்(கவிகள்) என் சித்தம் கலைக்கிறது.
    அனுபவம் தான் சித்தனை உருவாக்கிறதோ ?

    ReplyDelete