சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
உங்களை நினைத்தால்
சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
உண்மையில்
உங்களை நீங்கள் எடை
போடலாம்
தைரியத்தில்
உங்களை எடை போடலாம்
நம்பிக்கையில்
உங்களை எடை போட்டுப்
பார்க்கலாம்
அன்பில் கூட
அதைச் செய்யலாம்
நட்பில்
உறவில்
பகிர்தலில்
உபச்சரிப்பில் என
உங்களை நீங்கள்
எடை போட்டுப் பார்க்கலாம்
இதையெல்லாம் விட்டுவிட்டு
தராசில்தான்
என்னை நான் எடை
போட்டுப் பார்க்க வேண்டும் என்று
நீங்கள் சொல்வதை நினைத்தால்
சிரிப்பு சிரிப்பாய் வருகிறது