குழந்தை பசியைச் சொல்கிறது
அம்மா கதை சொல்லி தூங்கவைக்கப் பார்க்கிறாள்
குழந்தை மறுபடியும் பசியைச் சொல்கிறது
அம்மா வேறொரு கதை சொல்கிறாள்
புரிந்துகொண்ட குழந்தை கேட்கிறது
இன்னொரு கத சொல்லும்மா
குழந்தை பசியைச் சொல்கிறது
அம்மா கதை சொல்லி தூங்கவைக்கப் பார்க்கிறாள்
குழந்தை மறுபடியும் பசியைச் சொல்கிறது
அம்மா வேறொரு கதை சொல்கிறாள்
புரிந்துகொண்ட குழந்தை கேட்கிறது
இன்னொரு கத சொல்லும்மா
“நீங்கள்”
“பயணி”
“நீங்கள்”
“நானும்
பயணி”
“எங்கு
போகிறீர்கள்”
“இலக்கு
நிர்ணயம் எதுவுமில்லை
போய்க்கொண்டிருக்கிறேன்...நீங்கள்”
“நானும்
அப்படித்தான்”
“எங்கிருந்து
வருகிறீர்கள்”
“என்னிடமிருந்து”
“நல்ல
பதில்...நீங்கள்”
“தாயின்
கருவறையிலிருந்து”
“இதுவும்
நல்ல பதில்தான்”
“நாம்
சேர்ந்து போகலாமா”
“மன்னிக்கவும்
“வேண்டாம் என்கிறீர்களா”
“மறுபடியும்
மன்னிக்கவும்”
“தனிமையும்
பயணமும்
சரியான
துணை...சரிதானே...”
“மிகச்சரி”
“நன்றி
உங்கள் பதில்களுக்கு
வேறு
எங்காவது
மறுபடி
நாம் சந்திக்க வாய்ப்பு கிடைத்து
அப்போது
இதே கேள்வியைக் கேட்டால்
ஒத்துக்கொள்வீர்களா”
வரப்போகும்
பதிலை
இந்தத்
தருணத்தில்
சொல்லும்
சக்தி
எனக்குக்
கிடையாது”
“பார்க்கலாம்”
“பார்க்கலாம்”
“சந்திப்போம்”
“சந்திப்போம்”
“நன்றி”
“நன்றி”
பலமுறை அவரைப் பார்த்திருக்கிறேன்
தலை
குனிந்தேஇருக்கும்
சதுரங்க
ஆட்டத்தில்
கவனம்
குவிந்திருக்கும்
காய்நகர்த்தலில்
கண்
இருக்கும்
ஒருநாள்
அவர் அருகில்போய்
மெல்லக்
கேட்டேன்
அய்யா
தனியேதான்
செஸ்
ஆடுவீர்களா
புன்னகைத்தார்
பிறகு
சிரிப்புக்கு மாறினார்
என்னோடு
முப்பத்தி இரண்டு
தோழர்கள்
இருக்கிறார்கள் என்றார்
செக்
எனச் சொல்லிவிட்டு
எதிரில்
இல்லாதவரைப் பார்த்தார்
வெற்றியைத்
தனதாக்கினார்
உங்களோடு
நான் ஆடலாமா என்றேன்
வாங்க
முப்பத்து மூன்றாவது
தோழரே
என்றார்