1-
முழு
கடலையும்
மறைக்கிறான்
சுண்டல்
விற்கும் சிறுவன்
2-
நதி கண்களில்
வழிகிறது
மணல்
லாரிகளில்
நீந்துகின்றன
மீனகள்
3-
எனது
காட்சி
இன்னும்
வரவில்லை
திரை
இறக்குபவனை
பதட்டத்துடன்
பார்க்கிறேன்
4-
இது ஒரிஜினல் ரத்த்த்தில்
வரைந்த
ஓவியம்
இதற்கு
ரத்தம் தந்தவர்
பக்கத்தில்
இறந்து
கிடக்கிறார் பாருங்கள்
அவரை
அடக்கம் செய்யவாவது
இந்த
ஓவியத்தை
நீங்கள்
வாங்கித்தான்
ஆக வேண்டும்
5-
காட்சிகள்
இல்லாத
ஒரு பகல் நேரத்தில்
மிகத்தனியே
குலுங்கி
குலுங்கி அழுகிறான்
சர்க்கஸ்
கோமாளி
தன் கைகளைத் தட்டியபடி
6-
நூலகம்
பசி மறக்க
புத்தகம்
7-
பாலின் ஏடென
படிந்து கிடக்கிறது மெளனம்
நீக்கி
பருகப் பார்க்கிறேன்
உள் உறைந்த சொற்களை