Tuesday, November 26, 2019

என்ன செய்யப்போகிறீர்கள்

பயம் துரத்துகிறது
என்ன செய்யப்போகிறீர்கள்

தைரியத்தோடு சேர்ந்து
விரட்டப் போகிறேன்

தைரியம் துரத்துகிறது
என்ன செய்யப் போகிறீர்கள்

அதோடு சேர்ந்து
ஓடப் போகிறேன்

Monday, November 25, 2019

கடந்துவிடுவேன்


வேலைப்பாடுள்ள துப்பாக்கி

குறி பார்க்கிறது

கலை நயம் மிக்கக் கொலையைச்
செய்யப் போகிறது

என்ன செய்யப் போகிறீர்கள்

வழக்கம் போல்
கடந்துவிடுவேன்





Wednesday, November 20, 2019

பள்ளத்தாக்கு


நான் பள்ளத்தாக்கு
உயரம் கேட்டுத்
தொந்தரவு செய்யாதீர்கள்



Monday, November 11, 2019

அசுரப் பசி

அசுரப் பசி
என்னை
அடையாளம் காட்டும்

Saturday, November 09, 2019

உரையாடலானது


உரையாட
ஒன்றுமில்லை என்றார்
கனத்த குரலுடன்

ஏதாவது
பேசலாமே என்றேன்

சரி என்றார்
குரலில்
கடுமை குறைத்து

பேசினோம்
பிறகு
உரையாடலானது



Thursday, November 07, 2019

வாயேன்

எதிலிருந்தோ தப்பிக்கத்
தற்கொலைக்குப் போகிறாய்
தற்கொலையிலிருந்து தப்பிக்க
வாழ்க்கைக்கு வாயேன்

Wednesday, November 06, 2019

உள்ளங்கையில்...

உள்ளங்கையில்
எழுதிவிடக்கூடிய
கதை ஒன்றை
உனக்குச் சொல்கிறேன்
அது பிரபஞ்சத்தை
அணைப்பது போல்
நீண்டுகொண்டே போகிறது