குறுஞ்செய்தி
அடித்துக்கொண்டிருந்தான் கோமாளி
சர்க்கஸ்
ஷோ முடித்துவந்த களைப்பு
கண்களில்
ஆரம்பித்து
உடல்
முழுதும் பரவி இருந்தது
அவனுக்குப்
பின்கதைகள் பல உண்டு
சர்க்கஸ்
பார்க்கவந்து
அவனை
அநாதையாக
விட்டுப்போய்விட்ட
பெற்றோர்
இங்கேயே
எடுபிடியாகி
வளர்ந்து
சிரிக்கவைக்கும்
சாதுர்யத்தால்
கோமாளியானது
குள்ளமாகக்
குழந்தை பிறந்துவிடுமோ
என்ற
பயத்துடன்
ஓடிப்போன
மனைவி
பிறகு
ரிங்மாஸ்டரும்
இல்லாமல்போனது
அடிக்கடி
வரும் கால்வலி
வலி
மறைக்க
சிரிப்பில்
சேர்க்கு ஒலிகள்
சர்க்கஸ்சில்
வெடிப்பும் சிரிப்புமாக இருப்பவன்
உள்ளே
வந்தால்
மெளனத்தில்
முடங்கிவிடுவான்
“நீளமான
குறுஞ்செய்தியா”
“ஆமாம்”
“என்ன
எழுதுகிறாய்
“யாருக்கு
அனுப்பப்போகிறாய்”
சொன்னான்
“படித்து
உள்வாங்கும்
ஒரு
ஜீவனுக்கு
யாரென்று
தெரியவில்லை
கடவுளின்
எண் கிடைத்தால்
அவருக்கு
அனுப்பிவைக்கலாம்”