தற்கொலை செய்து கொள்ளப்போகும்
ஒருவனை
வரைந்து முடித்தேன்
மீதி இருந்த வண்ணத்தில்
அவன் முடிவை மாற்றிக்கொண்டு
திரும்ப வேண்டும் என்ற
பிரார்த்தனை கவிதையை
எழுதி வைத்தேன்
நான் மட்டுமே உள்ள அறையில் என்ற வரியை மனதால் மட்டுமே வாசியுங்கள் நீங்கள் சத்தம் போட்டு வாசிக்கையில் வேறு சிலரும் இருப்பது போன்ற தொனியை அது தந்து விடக் கூடும்