காற்றின் பெருவெளியில்
அப்பாவின் இசை
அவர் விரல்கள் ஒற்றி எடுக்க
பரவுகிறது நாதம்
புல்லாங்குழலிலிருந்து
அருகே வரும் குழந்தை
நாய்க்குட்டி பொம்மையை
வைத்துவிட்டுப் பார்க்கிறது
வாசிப்பின் இடையே அப்பா
மெல்ல கண் திறக்கும்போது
புல்லாங்குழலைக் கேட்கிறது
வாங்கிப் போய் அதை
ஒரு பொம்மையாக்கி விளையாடுகிறது
புல்லாங்குழலைத் தூக்கி எறிகிறது
பின் ஓடிப்போய் எடுக்கிறது
பிரியமான நாய்க்குட்டியைத்
தட்டுகிறது
தன் வாயில் வைத்து
ஊதிப் பார்க்கிறது
ததும்பும் ஆனந்தத்துடன்
இரு வேறு அனுபவங்களில்
திளைக்கிறார் அப்பா
குழந்தையின் கையில்
இசை விளையாடுவது போன்றும்
தனக்குத் தெரியாத இசையை
குழந்தை கற்பிப்பது போன்றும்
ரொம்ப நல்லா இருக்கு. சில சமயம் குழந்தைகளே நமக்கு ஆசான்களாகவும் மாறிவிடுகிறார்கள் இல்லையா?
ReplyDeleteஅருமை சந்திரா!
ReplyDeleteநன்றி கல்யாணி,பாரா.
ReplyDeleteஇரு இசையின் ஊடே வேறொன்றை இசைக்கிறது கவிதை
ReplyDeleteithu nallaayirukke!!
ReplyDelete