அணில் சொன்ன கதையில்
மரம் இருந்தது
மரத்தில் விளையாடிய போது
கதை மறைந்தது
ஒரு கிளையில் அணிலும்
மறு கிளையில் நானும்
எனது வார்த்தைகளை
பழங்களாகத் திருப்பித் தந்தது
ஒவ்வொரு பழமும்
ஒவ்வொரு ருசியில்
கிளை அசைத்து
ஒளியை ஆடவிட்டது
குதித்து உச்சி ஏறி
கை தட்டி சிரித்தது
பயத்தைப் போட்டு விட்டு
மேலே வா என்றது
நகராத என் மேல் இரக்கப்பட்டு
கீழிறங்கியது
ஒரு பொம்மை போல்
என்னை வைத்து
விளையாடிய அணிலுக்கு
மின்னல் குட்டி
என்று பெயர் வைத்தேன்
தன் சகாக்களுக்கு என்னை
அறிமுகம் செய்தது
நீ மாமிசம் புசிப்பவனா
வேகமாய் கேட்டது
சற்று வயதான அணில்
எனது ஆமாம்
கோபத்தை உண்டாக்கியது
அந்த மையத்தில்
விருந்தினரை நாகரீகமாக நடத்த வேண்டும்
எனக்காக வாதாடிய மின்னல் குட்டி
மறைந்தது போனது
கதையில் என்னை விட்டு விட்டு
//விருந்தினரை நாகரீகமாக நடத்த வேண்டும்
ReplyDeleteஎனக்காக வாதாடிய மின்னல் குட்டி
மறைந்தது போனது
கதையில் என்னை விட்டு விட்டு //
நல்ல எதார்த்தமான கவிதை அன்பரே...கொஞ்சம் கற்பனையுடன் அருமை...
பேஷ்..பேஷ்... ரொம்ப நன்னாயிட்டுயிருந்தது
ReplyDelete