ஒரு புராதன சொல்
கவிதையில் புகுந்து கொண்டு
மொத்த கட்டுமானத்தையும்
கலைத்துப் போட்டது
ஒரு அகராதியின் குணம்
தன்னிடம் இருப்பதாக
சொல்லியபடி
எழுதிய காகிதங்களைத்
தின்று முடித்தது
பின் ஓடிப் போனது
புராதன வெளிக்குள்
சொல் சென்ற
வழி எங்கும்
இறைந்து கிடந்ததன
காலத்தின் தூசிகளும்
கவிதையின் சில்லுகளும்
அபாரம் சந்திரா.
ReplyDeleteஅருமை!
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
Superb.
ReplyDeleteநல்லா இருக்கு...
ReplyDeleteபுராதன சொல்லைக் கவிஞனின் திமிராகவும் நான் எடுத்துக் கொள்கிறேன்...