Saturday, January 14, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

811-

நான் தயாரித்த
கண்ணாடி எனினும்
இருப்பதுபோல்தான்
என்னையும் காட்டும்

812-

நகர்த்த நகர்த்த
நகர்வது
வேகமாகும்

813-

நடிக்கத் தெரியாத
வார்த்தைகள்
வரும்
ஒத்திகையின்றி

814-

நடந்த கதை
நடக்கும் கதை
நடக்கப்போகும் கதை
மூன்றிலும்
காலம் எப்போதும்
கதாபாத்திரமாய்

815-

கண்ணீர் துளி
அருகில் செவி
உற்றுக் கேட்க
கடலின் ஒலி

816-

நான்
இருக்கிறேன்

1 comment:

  1. ஒவ்வொரு வரியும் தத்துவங்களை தாங்கி நிற்கின்றன

    ReplyDelete