Thursday, January 26, 2012

இரவின் கிளையில்

இரவின் கிளையில்
கனவொன்றைப் பறித்து
இறங்கினேன்
ருசிப்பதற்குள்
விடிந்து போயிருந்தது

4 comments:

  1. பகலில் கூட பழம் இனிமையாய்தான் இருக்கும். நிழலில் இருப்பது நிஜத்தில் இருப்பதைவிட சுகமானதுதான் நண்பரே!

    நன்றாக எழுதுகிறீர்கள். உச்சங்களைத் தொட வாழ்த்துக்கள். தங்கள் கவிதைப் பயணம் தொடரட்டும்.

    என் மனக்குறை ஒன்று உண்டு.

    இன்றைக்கு சிற்றிதழ்களில் வெளியாகும் கவிதைகள் எனக்கென்னவோ மனம் கவர்வதில்லை. இருண்மை அதிகமான கவிதைகளை நான் படித்தாலும் அதிகம் விரும்புவதில்லை. பாமரனுக்காக பாதை மாற்றிய கவியுலகம் மறுபடியும் பழைய பாதைக்குப் போய்விடக் கூடாதென்பது என் எண்ணம். அப்படியானால் மரபுக் கவிதையே மேல் என்பது என் கருத்து. இன்றைக்கு இருண்மை, புரியாத குறியீடுகள், உத்திகள் என்ற பெயரில் கிறுக்கல்கள். நவீன கவிதையென்று கவிதைப் பெண்ணை ஆளாளுக்கு கற்பழிக்கிறார்கள். உங்கள் கவிதை அந்த அளவில் பரவாயில்லை. சீதையை சீதையாகவே வைத்திருக்க வேண்டும். விபச்சாரியாக்கிவிடக் கூடாது. நன்றி!

    ReplyDelete
  2. வணக்கம் துரைடேனியல்- எனக்கு எழுத்து என்பது செயல்பாடு துல்லியம் நோக்கிநகர்தல் ஆழதரிசனங்களை அடைதல். இந்த தீராத வேகமும் பயணமுமே என்னை இயக்குகிறது.இதில் எழுத்து மட்டுமே முக்கியம்.குழு மன்ப்பான்மைக்குள் சிக்கிக்கொண்டு நம்மை இழந்துவிடக்கூடாது.நன்றி.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது உண்மைதான். நன்றி!

    ReplyDelete
  4. விடியலுக்கும் சில வரிகள் தருவீர்கள் என்று விடிந்திருக்கும் போல அருமைங்க

    ReplyDelete