Thursday, October 28, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

215-

உடலெங்கும்
காமத்தின் ஊழிக்கூத்து
திண்டாடுகிறான்
மனப்பாகன்

216-

கைதியிடம்
விடுதலை கேட்கிறது
சிறை

217-

அவர் வருவதற்காக
நான் காத்திருக்கிறேன்
நான் வருவதற்காக
அவர் காத்திருக்கிறார்
ஒருவரை ஒருவர்
பார்த்தபடி
காத்திருக்கிறோம்

2 comments:

  1. 215.

    மிதமிஞ்சிய காமம் கொண்ட மனம் மதம் கொண்ட யானைக்கு ஒப்பானதுதானே? "மனப்பாகன்" சொல்லாளுமை நல்லா இருக்குங்க.


    216.

    Cute ஆ இருக்குங்க.

    217.

    வீண் பிடிவாதங்களையும், வறட்டு கௌரவங்களையும் தூக்கி எறிந்து விட்டால் இந்த காத்திருப்பின் வலியை அனுபவிக்க தேவை இல்லைதான்.

    ReplyDelete