181-
யாருமில்லாத கூண்டின்
ஜன்னலோரம் அமர்ந்து
என் பாவங்களைச்
சொல்லிக் கொண்டிருந்தேன்
மணிசத்தத்தில்
நான் சொல்வது
கேட்காமல் போய்விடுமோ
என்ற அச்சம் வேறு
குரலில்
சத்தம் கூடியது
பாவங்களை
சொல்லிக்கொண்டே வர
சேர்ந்து கொண்டன
மறைந்து போனவைகளும்
யாருமில்லாத கூண்டின்
ஜன்னலோரம் அமர்ந்திருக்க
என் பாவங்கள் என்னைச்
சொல்லிக் கொண்டே வந்தன
மூச்சுவாங்கிய நிலையில்
பாவங்கள் சொல்லி
முடிக்கப் பட்டனவா
என்று படபடத்தபோது
கூண்டு மெல்ல
சவப்பெட்டியாகி
என்னை
விழுங்கிக் கொண்டது
அண்ணே மனதில் இருப்பது அரிக்க தொடங்கினால் இப்படி தான் ஆகுமோ?
ReplyDeleteexcellent one... R
ReplyDeleteராஜா உங்களின் தொடர்ந்த வாசிப்பிற்கும் கருத்துக்கும் நன்றி.நன்றி வினோ.
ReplyDeleteChandramohan Vetrivel comments in facebook...
ReplyDeleteChandramohan
//யாருமில்லாத கூண்டின்
ஜன்னலோரம் அமர்ந்திருக்க
என் பாவங்கள் என்னைச்
சொல்லிக் கொண்டே வந்தன//
amazing
ithu thaan poetry in vetri..very good one.
thanks chandramohan
//யாருமில்லாத கூண்டின்
ReplyDeleteஜன்னலோரம் அமர்ந்திருக்க
என் பாவங்கள் என்னைச்
சொல்லிக் கொண்டே வந்தன//
Superb Raajaa.