Tuesday, February 03, 2009

பூக்களின் குழந்தை

மரத்தை அசைக்கிறாள் சிறுமி
பூக்கள் உதிர்கின்றன
கைதட்டி சிரிக்கிறாள்
மறுபடி அசைக்கிறாள்
தொலைவிலிருந்து
கூப்பிடுகிறார் தாத்தா
சிறுமியின் கைகள்
சொன்னதைக் கேட்டு
வடிந்து விட்டன்
அநேகமாய்
எல்லா பூக்களும்
அழைத்துப் போகிறார் தாத்தா
திரும்பிப் பார்த்தபடி செல்லும்
சிறுமியின் தலையில்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில பூக்களும்
மரத்தின் பிரியமும்

(நேத்ராவுக்கு)

5 comments:

  1. அவளுக்கான உங்கள் அத்தனை அன்புக்கும், பிரியத்துக்கும், அநேக பூக்களின் ஆஷிர்வாததிக்கும் என் நன்றிகள்!!

    ReplyDelete
  2. தாத்தாவின் அன்பும் மரத்தின் பரிச்சயம் கண்ட பிரியமும் ​நேத்ராவுக்கு உண்டு. நான் இன்று மதியம் ஆங்கில ​தொலைகாட்சியல் கண்ட காட்சி மரத்து​போன ​
    இதயங்களை ​கொண்ட தாத்தாவயதாகியும் பதவியில் ஒட்டி​கொண்டிருக்கும் ​காவல்துறை இன்ஸ்​பெக்டர் மற்றும் ஸப்இன்ஸ்பெக்டர் ஆகிய இருவர் ஒரு ஏழை ​பெண் குழந்தையின் தலைமுடியைபிடித்து
    அடித்து​​கொண்டிருந்தார்கள் உத்ரபிர​தேசத்தில். என் மனதில் அந்த குழந்​தை உங்கள் கவிதை குழந்தையான ​நேத்ராவாக மாறகூடாதா என்ற ஏக்கம்தான் வந்தது. மனிதஉரிமை என்பது அரசியல்வாதிகளின் மற்றுமொறு ​கேடயம்.

    ReplyDelete
  3. wow! excellent........

    ''சிறுமியின் தலையில்
    ஒட்டிக் கொண்டிருக்கின்றன
    சில பூக்களும்
    மரத்தின் பிரியமும்''

    ReplyDelete
  4. i simply love this one. i can picture this :)

    சிறுமியின் தலையில்
    ஒட்டிக் கொண்டிருக்கின்றன
    சில பூக்களும்
    மரத்தின் பிரியமும்

    ReplyDelete