மரத்தை அசைக்கிறாள் சிறுமி
பூக்கள் உதிர்கின்றன
கைதட்டி சிரிக்கிறாள்
மறுபடி அசைக்கிறாள்
தொலைவிலிருந்து
கூப்பிடுகிறார் தாத்தா
சிறுமியின் கைகள்
சொன்னதைக் கேட்டு
வடிந்து விட்டன்
அநேகமாய்
எல்லா பூக்களும்
அழைத்துப் போகிறார் தாத்தா
திரும்பிப் பார்த்தபடி செல்லும்
சிறுமியின் தலையில்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில பூக்களும்
மரத்தின் பிரியமும்
(நேத்ராவுக்கு)
அவளுக்கான உங்கள் அத்தனை அன்புக்கும், பிரியத்துக்கும், அநேக பூக்களின் ஆஷிர்வாததிக்கும் என் நன்றிகள்!!
ReplyDeleteதாத்தாவின் அன்பும் மரத்தின் பரிச்சயம் கண்ட பிரியமும் நேத்ராவுக்கு உண்டு. நான் இன்று மதியம் ஆங்கில தொலைகாட்சியல் கண்ட காட்சி மரத்துபோன
ReplyDeleteஇதயங்களை கொண்ட தாத்தாவயதாகியும் பதவியில் ஒட்டிகொண்டிருக்கும் காவல்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் ஸப்இன்ஸ்பெக்டர் ஆகிய இருவர் ஒரு ஏழை பெண் குழந்தையின் தலைமுடியைபிடித்து
அடித்துகொண்டிருந்தார்கள் உத்ரபிரதேசத்தில். என் மனதில் அந்த குழந்தை உங்கள் கவிதை குழந்தையான நேத்ராவாக மாறகூடாதா என்ற ஏக்கம்தான் வந்தது. மனிதஉரிமை என்பது அரசியல்வாதிகளின் மற்றுமொறு கேடயம்.
wow! excellent........
ReplyDelete''சிறுமியின் தலையில்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில பூக்களும்
மரத்தின் பிரியமும்''
i simply love this one. i can picture this :)
ReplyDeleteசிறுமியின் தலையில்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில பூக்களும்
மரத்தின் பிரியமும்
superb.............
ReplyDelete