தற்கொலைக்கு
மலையுச்சிக்கு
வந்தவன்
காட்சிகளைப்
பார்த்து வியக்கிறான்
தலை உரசிப்போகும்
பறவைக்கு
கையசைக்கிறான்
காலடியில்
கிடக்கும்
கற்களை
எடுத்து முத்தமிடுகிறான்
அமர்கிறான்
கண்மூடித்
தியானிக்கிறான்
வேண்டாத
எண்ணங்கள்
ஒவ்வொன்றையும்
அழிக்கிறான்
தற்கொலை
எண்ணம்
அதில்
உயிரிழக்கிறது
மலையின்
பிரமாண்டம்
அவனுக்கு
வாழ்தலில்
விசாலத்தைச்
சொல்கிறது
மலையை
வணங்குகிறான்
அவன் நன்றியின்
கண்ணீர்த்துளி
மலை உடம்பில்
விழுகிறது
அது அசைந்து
ஆசிர்வதுப்பது
போலிருக்கிறது
மலையிலிருந்து
அருவி
இறங்கிவருவதுபோல்
மெல்ல
இறங்கிப் போகிறான்
No comments:
Post a Comment