அநாதையான பந்து
பேருந்துக்குள்
உருண்டோடுகிறது
பெரியவர் காலடியைத் தொடுகிறது
அந்த மஞ்சள் நிறப் பந்தை எடுத்து
வேட்டியால் துடைத்து
பின்னால் அமர்ந்திருக்கும்
குழந்தையிடம் தருகிறார்
வாங்கிக்கொண்டு
அழுகையை நிறுத்துகிறது
பிறகு வேகமாக எறிகிறது
ஜன்னல்தாண்டி பந்து
வெளியே போய்விடுகிறது
பேருந்து ஒரு வளைவில் திரும்பி மறைகிறது
சாலை விளிம்பில்
ஆடு மேய்க்கும் சிறுமியிடம்
கிடைக்கிறது பந்து
பந்தை முத்தமிட்டுத்
தூக்கிப்போட்டு
விளையாடுகிறாள்
அவள் சிரிப்பில்
புற்கள் அசைகின்றன
ஆடுகள் திரும்புகின்றன
வானிலிருந்து
சொர்க்கம் வருவதுபோல்
அவள் கைக்குத் திரும்புகிறது பந்து
இந்தக் காட்சி
சூரிய ஒளியில்
திரைச்சீலையில்
அசைந்தாடும்
சித்திரம்போல் தெரிகிறது
அற்புதம்
ReplyDeleteயதார்த்தமான வார்த்தைப்பிரவாகத்துடன்
ReplyDeleteபந்து கவிதைப் பாடுகிறது...
அருமை.