419-
என் மேல்
மிருகத்தைப்போல்
படுத்துக்கிடக்கும்
அறியாமை
420-
எழுதப் பழக
நீச்சல்
வெற்றுத் தாளில்
421-
எதுவுமில்லை
அள்ளியபோது
எதுவும்
இல்லாமலில்லை
422-
தொடும்போதெல்லாம்
விரல் வழியே
உள் வரும் உலகம்
423-
உருகி வழியும் தூக்கம்
பிசின் போல ஒட்டும்
ஓடும் காலடிகளில்
424-
யுத்தம் பழகிய
உடலை
தியானத்தில்
புதைத்து வைத்தேன்
தியானம் பழகிய
அன்பை
வெளியில்
நட்டுவைத்தேன்
/////
ReplyDeleteஎன் மேல் படுத்துக்கிடக்கும்
ஒரு மிருகத்தைப்போல்
அறியாமை
/////
அறியாமை என்பது உண்மையில் மிருகம் தான்
அனைத்தும் அருமை..
ReplyDeleteபயனுள்ள, தேவையான குறிப்புகள்..
ReplyDelete