34-
கிடைத்துவிட்டன கேள்விகள்
கிடைக்காமலா போகும்
பதில்கள்
35-
நீளமாக நீங்கள்
வரையும் கோடும்
சிறிதாக நான்
வரையும் கோடும்
கோடுகள்தான்
கோடுகளன்றி வேறில்லை
36-
நீ தூக்கி
எறிந்து
நீயே பிடி
உன்னை
பிறர் பிடித்தால்
பின் தூக்கி
எறியப்படுவாய்
திரும்ப உனக்குள்
வந்து சேராதபடி
37-
இரண்டாவது
உதிர்ந்த இலை
துணையாயிற்று
முதலில்
விழுந்த இலைக்கு
38-
உறக்கத்திலிருந்து
வெளியேறி விட்டேன்
ஆறுதல்படுத்த வேண்டும்
இமைகளை
சித்தனின் குறிப்புகள் நல்லாயிருக்குங்க
ReplyDelete//கிடைத்துவிட்டன கேள்விகள்
ReplyDeleteகிடைக்காமலா போகும்
பதில்கள்//
ஒரு கை பார்க்காம விடுறதில்லை னு முடிவு பண்ணிட்டீங்க போல இருக்கே?
//நீளமாக நீங்கள்
வரையும் கோடும்
சிறிதாக நான்
வரையும் கோடும்
கோடுகள்தான்
கோடுகளன்றி வேறில்லை//
அவரவர் கூடு அவரவர்க்கு அரண்மனையே!
நீ தூக்கி
எறிந்து
நீயே பிடி
உன்னை
//பிறர் பிடித்தால்
பின் தூக்கி
எறியப்படுவாய்
திரும்ப உனக்குள்
வந்து சேராதபடி//
உண்மைதான்.
//இரண்டாவது
உதிர்ந்த இலை
துணையாயிற்று
முதலில்
விழுந்த இலைக்கு//
வீழ்ச்சியில் கூட நட்பின் தரிசனம்.
//உறக்கத்திலிருந்து
வெளியேறி விட்டேன்
ஆறுதல்படுத்த வேண்டும்
இமைகளை //
வாழ்க்கையின் ஓட்டத்தில் உறக்கம் கூட இரண்டாம் பட்சமாகிப் போனது.
நன்றி அசோக்,கல்யாணி.
ReplyDeleteகல்யாணி உங்கள் தொடர்ந்த வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
yellaamum nice........
ReplyDelete