Tuesday, July 21, 2009

வெற்றிடத்தில் ஒரு குறிப்பு

அந்தக் கதையில்
நிறைய அறைகள் இருந்தன
ஒவ்வொருவராகப் புகுந்து
வெளியேறிக் கொண்டிருந்தனர்

அந்தக் கதையில்
நிறைய ஜன்னல்கள் இருந்தன
காற்றும் இசையும்
உள் நிறைந்து
வெளி வந்தது

அந்தக் கதையில்
நிறைய மரங்கள் இருந்தன
அணிலும் பறவைகளும் விளையாடின

அந்தக் கதையில்
விதைகள் நடப்பட்டிருந்தது
படிக்கப் படிக்க
பூத்துக் குலுங்கியது

அந்தக் கதையில்
மழை பெய்தது
வானவில் தென்பட்டது
கடவுள் குழந்தைகளோடு
பேசிக்கொண்டிருந்தார்

அந்தக் கதையில்
வாசிப்புத் தன்மை
கடைசி பக்கத்திலிருந்தும்
படிப்பதுபோல் அமைந்திருந்தது

முன்னிருந்தும் பின்னிருந்தும்
படித்துக் கொண்டே வந்தவர்கள்
சந்தித்துக் கொண்டார்கள்

வெற்றிடமான பக்கங்களில்
அமைதியாக உங்களைப் படியுங்கள்
என்ற குறிப்பு மட்டும்
காணப்பட்டது

7 comments:

  1. ஒரு படைப்பின் வெற்றியும் கூட.
    இந்த கவிதையை போல

    ReplyDelete
  2. நல்லா இருக்கு. ரசித்தேன்.

    ReplyDelete
  3. அற்புதம்!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. ரசித்தேன்.
    அழகான கவிதை

    ReplyDelete
  5. வெற்றிடத்தைக்கூட கவிதையாக்க உன்னால் மட்டுமே முடியும் நண்பா.... அருமை.

    ReplyDelete