கண்கள் ஒளிர
இசையழகு
கெடாமல் பாடுவாள் தங்கை
அவளிடம் பாடல் வாசம்
விட்டுக்கொடுக்காதவர் அப்பா
அவரிடம் கண்டிப்பு வாசம்
மழலை மாறவில்லை குட்டித்தம்பியிடம்
அவனிடம் பிஞ்சு சொற்களின் வாசம்
குனிந்த தலை நிமிராமல்
நோண்டிக்கொண்டே இருக்கும் அண்ணனிடம்
செல்போன் வாசம்
டீவித்தொடர்களிலிருந்து
வெளிவராத
பாட்டிக்கு
கதைகளின்
வாசம்
வாலாட்டிக்கொண்டே
சுற்றி
வருவான் அன்பு
அவனை
நாயென்று சொல்லக்கூடாது
அவனுக்கு
நன்றிதான் வாசம்
காலநேரத்திற்கு
ஏற்றார்போல்
மாறும்
வாசம் வீட்டிற்குண்டு
அம்மாவிற்கு
அதைத்தானே
கேட்கிறீர்கள்
எப்போதும்
மாறாத
சமையலறை
வாசம்
அவர்களிடம் இருப்பது வாசம் மட்டும்தான். ஆனால் நாங்கள் உங்கள் எழுத்தின்மீது வைத்திருப்பதோ தணியாத நேசம்.
ReplyDelete