1076-
வெகு ஆழத்தில்
தியானம் செய்யும்
கனவின் ஆழத்தில்
இருக்கிறேன் நான்
1077-
பயம்
துரத்திக்கொண்டே இருக்கிறது
நல்லது
ஓடிக்கொண்டே இரு
1078-
என் பிரார்த்தனை தட்டில்
பாவங்கள்
ஆனாலும்
கடவுள் முன் நிற்கிறேன்
1079-
நாளை நான்
கிடைக்கக் கூடும்
அதற்கு இன்று
தொலைய வேண்டும்
1080-
இந்த வாக்கியம்
உண்மையாக எளிமையாக
இருந்தது
அழகாக்கியபோதுதான்
பொய்யும் பூதமும்
சேர்ந்து விட்டது
1081-
தட்டி எழுப்புகிறது
கேள்வி
நானே பதிலாகிறேன்
1082-
நிராயுதபாணி
நெஞ்சில் ஒலிக்கிறது
நானே ஆயுதம்
அனைத்தும் அருமை ஐயா...
ReplyDeleteமிகவும் ரசித்தது : 1077, 1080
அக உணர்வுகளை அருமையாக சொல்லிச் செல்கிறீர்கள்...
ReplyDelete