973-
இவ்வளவு
இருள் மழை
கண்கள் மூடி
நனைகிறேன்
980-
எங்கிருக்கிறது
இல்லாதது
981-
மௌனத்தின்
ஆழத்தில்
ஆழத்தின்
மௌனம்
இவ்வளவு
கடுமையானதா
எழுதுவது
இவ்வளவு
எளிமையானதா
எழுதியது
974-
வளைவின்
முனைகளில் நாம்
வளைவையும்
நம்மையும்
நேராக்கும் முயற்சியில்
975-
உங்கள் முதுகில்
பாய்ந்திருக்கிறது
என் கத்தி
வீரத்திற்கான பரிசு
என் கைகளில்
976-
சுவாரஸ்யமான போட்டி
முந்திக்கொண்டிருக்கும் என்னை
முந்த விரும்பும் நான்
977-
ரயில் பெட்டிகளை
வரைகிறாள் குழந்தை
அவள் பென்சில் வழியே
ஓடிக்கொண்டிருக்கிறது ரயில்
978-
பழகிய பறவையின்
சிறகை வருடினேன்.
வானத்தின் வாசம் வீசியது
979-
கண்கள் மூடி
நனைகிறேன்
980-
எங்கிருக்கிறது
இல்லாதது
981-
மௌனத்தின்
ஆழத்தில்
ஆழத்தின்
மௌனம்
அருமை...
ReplyDeleteமிகவும் ரசித்தது : 973, 977 and 978
அருமை
ReplyDeleteகடைசி ஒன்றினைத் தவிர மற்றவை எல்லாமே வலுவான அர்ததங்களை சுமந்து கொண்டிருக்கிற எளிய சொற்கள். பாராட்டுகள்.
ReplyDelete