456-
நான் எனும் சொல்
நான் சொல்ல
மொழியாயிற்று
457-
முன் கனவை நோக்கி
நான் சென்றேன்
பிற கனவுகள் வந்தன
எனை நோக்கி
458-
நான் வரைந்த பறவை
தான் அமர
வரைந்தது கிளையை
459-
இறந்த கால பிழையை
நிகழ்கால ரப்பரால்
அழிக்கப்பார்த்தேன்
முடியவில்லை
தேய்கிறது எதிர்காலம்
ஹக்கூப் போன்று அமர்க்களப்படுத்துகிறது..
ReplyDeleteதங்கள் கவிதை...
///
நான் எனும் சொல்
நான் சொல்ல
மொழியாயிற்று//////
அமர்க்களம்...
/இறந்த கால பிழையை
ReplyDeleteநிகழ்கால ரப்பரால்
அழிக்கப்பார்த்தேன்
முடியவில்லை
தேய்கிறது எதிர்காலம் /
இது ரொம்ப அருமை!
நன்றி அருணா,செளந்தர்.
ReplyDelete