56-
நான் கடவுளானது தெரியாமல்
என்னை மனிதனாகப்
பார்த்துக் கொண்டிருந்தார் கடவுள்
அவர் மனிதரானது தெரியாமல்
கடவுளாக பார்த்துக் கொண்டிருந்தேன் நான்
57-
வாருங்கள்
நம் தேடுதல் இயந்திரத்தை
கடலில் எறிந்து விட்டு
தொலைந்து போவோம்.
58-
எறும்பு வரிசையை
பார்த்தபடியே
கலைந்து போகும் எண்ணங்கள்.
59-
காற்றின் எடைக்கேற்ப
அசைகிறது
தராசுத் தட்டு
60-
இந்த சவப்பெட்டி
உங்கள் அளவுக்கு
சரியாக இருக்கிறதா
ஒரு முறை
படுத்துப் பார்த்து
தெரிந்து கொள்ளுங்கள்
அதுபோல் செய்துவிட்டு
சிரித்தபடி யோசித்தான்
சரியாக இருந்தது
மரணத்தின் ஒத்திகை
57-vathu nallaayirukku....
ReplyDeleteமரண ஒத்திகை வாழ்தலின் பிறப்பு. அருமை.
ReplyDeleteஅனைத்தும் ரசிக்கும் படியாக.. அருமை
ReplyDeleteநான் கடவுளானது தெரியாமல்
ReplyDeleteஎன்னை மனிதனாகப்
பார்த்துக் கொண்டிருந்தார் கடவுள்
அவர் மனிதரானது தெரியாமல்
கடவுளாக பார்த்துக் கொண்டிருந்தேன் நான்
இரண்டுபேரும் நினைத்தது "நான் நான் சிவம் "
வாருங்கள்
ReplyDeleteநம் தேடுதல் இயந்திரத்தை
கடலில் எறிந்து விட்டு
தொலைந்து போவோம்.
யாரவது தேடினால் நல்லா இருக்கும் நம்மை