Wednesday, April 15, 2009

பேசும் மரம்

முதலில் மரம் பேசியது
பிறகு இலைகள் பேசின
கிளை விழுது வேர் என
ஒவ்வொன்றும் பேசியதை
அவன் கேட்டான்
இலைகளுக்கிடையே
இமை அசைத்த
ஒளிகற்றையின் மெளனமும்
காற்றோடு சேர்ந்து
அவனைத் தடவியது
விரிந்து கிடந்த
மரத்தின் நிழலில்
சாய்த்து வைக்கப்பட்டிருந்த
கோடாலியிடம் விசாரித்தான்
மரம் பேசியது
உனக்குக் கேட்டதா
ஊமை நாவோடு
பார்த்தது கோடாலி
தன்னை சமாதானம்
செய்து கொண்டு
கோடாலியை ஓங்கினான்
வெயிலைக் கிழித்து
பாம்பாய் சீறி
மரத்தைக் கொத்தியது
ஒவ்வொன்றாய்
உதிர்ந்து கொண்டே
வந்தன வார்த்தைகள்
கடைசி வரை
வார்த்தைகளில்
கசிந்த ரத்தத்தை அவன்
பார்க்கவே இல்லை

3 comments:

  1. அம்புட்டு ஈசியா என்ன மாதிரி ஆளுங்களுக்கு இதெல்லாம் புரியறதில்லைங்க ..

    ReplyDelete
  2. /விரிந்து கிடந்த
    மரத்தின் நிழலில்/
    /ஊமை நாவோடு
    பார்த்தது கோடாலி/

    விரிந்து கிடக்கும் நிழல் மற்றும் கோடாலியின் ஊமை நாவு விவரிப்பு நன்றாக இருக்கிறது ராஜா.

    /ஒவ்வொன்றாய்
    உதிர்ந்து கொண்டே
    வந்தன வார்த்தைகள்
    கடைசி வரை
    வார்த்தைகளில்
    கசிந்த ரத்தத்தை அவன்
    பார்க்கவே இல்லை/

    இந்த வரிகள் மிக ஆழமாய் இன்றைய மரங்களின் அழிவை சொல்கிறது.

    ReplyDelete