வந்து பார்க்காத
கடிதம் போடாத
மகனுக்கு
தந்தை எழுதினார்
ஊர் பக்கத்தில்
இருக்கிறது
நீதான் தொலைவாக
இருக்கிறாய்
(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)
------------------
பார்த்த வானவில்
அடுப்புக் கறியில்
வரையும் சிறுமி
(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)
------------------
தவறவிட்ட ரயில்
வழி அனுப்புகிறேன்
கையசைத்து
------------------
வெயிலில் நனைந்து செல்கிறேன்
என்று கதை மனோபாவத்துடன்
யோசித்தபடி
வெயிலில் காய்ந்து சொல்வது
கடினமாக இருக்கிறது
-------------------
ஒவ்வொரு கவிதையும் அருமை..
ReplyDeleteமுத்து முத்தாய் இருக்கு..
:)
பார்த்த வானவில்
ReplyDeleteஅடுப்புக் கறியில்
வரையும் சிறுமி
pidiththathu...........