Tuesday, July 15, 2008

கல் நதி

வார்த்தைகளை
மாற்றிப்பாடுகிறது குழந்தை
குழந்தையின் பாடலில்
தன்னைப் புதிது
செய்து கொள்கிறது கவிதை
----------

பிரசாதம் வாங்கிய
சிறுவனிடம்
கும்பிட்ட சாமியின்
பெயர் தெரியுமா கேட்டேன்
எனக்கு பசிக்குது சாமி
சொல்லியபடியே ஓடினான்

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

-----------

உள் உளி
பாய
நகர்கிறது
கல் நதி
------------
தான் வரைந்த கடலில்
நேற்றுப் பார்த்த கடல்
இருக்கிறதா
கேட்டாள் சிறுமி
அவள் நீலக் கோடுகளிலிருந்து
எம்பிக் குதித்த வண்ணமீன்
ஆம் என்று
சொல்லச்சொல்லி
உள் ஓடி
மறைந்து போனது
--------------

4 comments:

  1. நன்று. கல் நதி மட்டும் இன்னும் பிடிபடவில்லை. இன்னுமிருமுறை படித்துப் பார்க்கிறேன். அழகாக எழுதுகிறீர்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  2. //தான் வரைந்த கடலில்
    நேற்றுப் பார்த்த கடல்
    இருக்கிறதா
    கேட்டாள் சிறுமி
    அவள் நீலக் கோடுகளிலிருந்து
    எம்பிக் குதித்த வண்ணமீன்
    ஆம் என்று
    சொல்லச்சொல்லி
    உள் ஓடி
    மறைந்து போனது//

    மிக்க அருமை..

    ReplyDelete
  3. வார்த்தைகளை
    மாற்றிப்பாடுகிறது குழந்தை
    குழந்தையின் பாடலில்
    தன்னைப் புதிது
    செய்து கொள்கிறது கவிதை
    ----------

    //தான் வரைந்த கடலில்
    நேற்றுப் பார்த்த கடல்
    இருக்கிறதா
    கேட்டாள் சிறுமி
    அவள் நீலக் கோடுகளிலிருந்து
    எம்பிக் குதித்த வண்ணமீன்
    ஆம் என்று
    சொல்லச்சொல்லி
    உள் ஓடி
    மறைந்து போனது//

    2-m remba pidiththathu...........

    ReplyDelete