Sunday, January 20, 2008

நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்...

எனது கதையில்
வரும் கிழவி
உங்கள் ஊருக்கு வந்தால்
ஏதாவது கொடுங்கள்

சர்க்கரை குறைவான காப்பி
வேகவைத்த கடலை
ஒரு குவளை கஞ்சி
ரசம் சாதம்
முடியாவிட்டால் வெந்நீர்

அவள் சொல்வதைக்
கேட்க முடியாதபோது
ஒரு புன்னகைக் கொடுத்து
அனுப்பி விடுங்கள்

சிறு வயதில் இறந்த பேரன்
வெளிநாடு போய்
திரும்பாத மகன்
நிலங்களைத் தொலைத்தக் குடும்பம்
என உண்டு அவளிடம்
கண்ணீர் உடைக்கும் கதைகள்

நதி பார்த்தால்
நின்று விடுவாள் கிழவி
அவளை இறக்கி விடாதீர்கள்
நீச்சல் தெரியாது

கிழவிக்கு
எந்த சேதாரமும் நேராமல்
உடனே அனுப்பி வையுங்கள்

கதையின் நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்
கிழவிக்கு மரணம் நிகழ்ந்தாக வேண்டும்
நீரில் மூழ்கி

8 comments:

  1. ரெம்ப வித்தியாசமான கற்பனை

    ReplyDelete
  2. Very nice and catchy. Particularly,

    நதி பார்த்தால்
    நின்று விடுவாள் கிழவி
    அவளை இறக்கி விடாதீர்கள்
    நீச்சல் தெரியாது

    and

    கிழவிக்கு மரணம் நிகழ்ந்தாக வேண்டும்
    நீரில் மூழ்கி

    when looked together, give a very big picture.

    Thanks,
    vp

    ReplyDelete
  3. மிக அற்புதமான கவிதை இது.

    கவிதையில் வரும் கிழவி என்ற படிமத்தை ஊர் உலா வரச் செய்வது பிரமாதமாக வந்திருக்கிறது.

    ReplyDelete
  4. பாட்டி எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

    கதையை 177-ம் பக்கத்திற்கு மேல் படிக்கப் போவதில்லை!

    ReplyDelete
  5. பாட்டிகளை(கிழவிகள்) நீர் நதி முழ்கடித்தாலும்.. மனமேடைகளில் திரும்பத் திரும்ப தோன்றுவார்கள் ராஜா சந்திரசேகர் கவிதைகள் மூலமாக.

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா வந்திருக்கு கவிதையும், கடைசி வரித் திருப்பமும்.

    ReplyDelete