அவர்கள்
வெளியேறுவதற்காக
உள்ளே வந்தவர்கள்
உள்ளே வந்து
உங்களை வெளியேற்றியவர்கள்
அவர்கள்
வெட்டுவதற்கு முன்னால்
உயிரைத் தடவிக் கொடுப்பவர்கள்
அவர்கள்
இனிப்புப் புன்னகையில்
ஈக்களாய் உங்களை
மொய்க்க வைப்பவர்கள்
அவர்கள்
நீங்கள் விழித்திருக்கும்போது
தூக்கத்தைத் திருடுபவர்கள்
தூங்கும்போது
கனவுகளைக் களவாடுபவர்கள்
அவர்கள்
உங்கள் பயண திசைகளை
மாற்றி வைப்பவர்கள்
உங்கள் கால்களால்
ஓடுபவர்கள்
அவர்கள்
உங்கள் பசியை
உண்பவர்கள்
அவர்கள்
உங்களை பொம்மைகள் என்று
நம்ப வைப்பவர்கள்
விளையாடிவிட்டு பின்
உடைத்துப் போடுபவர்கள்
அவர்கள்
உங்கள் ஏமாற்றத்தின் விந்தில்
உற்பத்தியாகிறவர்கள்
அவர்கள்
உங்களில் இருப்பவர்கள்
ஆனால் நீங்கள்
அவர்களில் இருப்பதில்லை
நண்பர்கள் சிலரைத் தவிர, என்னை சுற்றி "அவர்கள்" தான் இருக்கிறார்கள்.
ReplyDeleteஅருமையா வந்திருக்குங்க...
ReplyDeletesila avarkal irukkiraarkalthaan...........
ReplyDeleteaanaal,iruppavarkal yellam avarkal all.........