270-
குற்றம் செய்
குற்றம் அழிக்கும்
குற்றம் செய்
271-
தற்கொலைக்கு முன்
குடிக்கும் தேநீர்
வரியில் தொங்கியது
உயிரின் கயிறு
272-
உடன் வந்தவர்கள்
ஓடிப்போனார்கள்
கத்தி எறியப்போகிறவன்
கடைசி முறை
சிறுநீர் கழித்துவிட்டு
வரச் சொல்கிறான்
273-
வாய் அதக்கி
சேர்த்து
நசுக்கி
ரத்தம் பாயந்த
வார்த்தைகளைத்
துப்பிவிட்டு நடந்தேன்
பேச எதுவுமில்லை
274-
நஞ்சு கலந்திருக்கிறது
சொற்களின் வசீகரத்தில்
மயங்கிவிடாதீர்கள்
275-
கண் மூட
சுழலும் மெளனம்
காதோரம்
276-
எண்ணும் போதெல்லாம்
கூடிப்போகின்றன
அள்ளி வந்த பொய்கள்
//தற்கொலைக்கு முன்
ReplyDeleteகுடிக்கும் தேநீர்
வரியில் தொங்கியது
உயிரின் கயிறு//
கவிதை வரிகள் அருமை. தொடருங்கள் !!
பல அருமை
ReplyDeleteசில வெகுஅருமை