Thursday, December 09, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

250-

சொல்லாத
உண்மைகளுக்குத் தெரியும்
சொன்ன பொய்களின்
கணக்கு

251-

என்னைத் தூக்கி எறிந்து
ஒதுங்குமா பிணம் எனப்
பார்த்திருந்தேன்

கடல் ஒதுங்கியது
கரையிலிருந்த
என்னைப் பார்த்தபடி

252-

எதிர்பார்த்ததுபோல்
இல்லை

எதை எதிர்பார்த்தீர்கள்

தெரியவில்லை

253-

அடைந்துவிட்டதாக
சொன்ன இடத்தை
இப்போதுதான்
அடைந்திருக்கிறேன்

அடையப்போகும்
இடத்தையும்
இப்படியே
அடைந்துவிடுவேன்

1 comment:

  1. சின்ன சின்னதாய் அழகிய சரங்களை தொடுத்து கொண்டு இருக்கிறீர்கள்...எல்லாமே அருமையாக இருக்கிறது.

    ReplyDelete