Thursday, May 20, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

93-

எப்போதும் பயணிப்பவன்
பார்த்துக் கொண்டிருப்பான்
திசைகளை மணிகளாக

94-

இரவு நகர்கிறது
எறும்பு போல
கனவின் மீது

95-

பசியால் திருடியவனை
அடைத்தார்கள்
தப்பித்துப் போனான்
பசியால்

96-

தந்தது எதையும்
கேட்பதில்லை உலகம்
உலகம் போல்
உள்ளம் வேண்டும்

97-

கூண்டிலிருந்த பறவை
வெளியேறி விட்டது
கூண்டிற்கு
சுதந்திரம் கிடைத்து விட்டது

6 comments:

  1. நல்ல கவிதைகள்

    ரசித்தேன்

    ReplyDelete
  2. ithu 100 aanathum ithai oru thokuppaaka veliyidungal:)

    vaazhthukkal!!

    ReplyDelete
  3. எப்படி சில வரிகளில் உலகம் எழுதும் அமைப்பு கிட்டுகிறது. அருமை.

    ReplyDelete
  4. ungaloda ella kavithaikulum romba virumbi padikkiren .mikavum arumai

    ReplyDelete