Tuesday, May 11, 2010

உலகின் கரம்

எங்கள் வலிகளை
நீங்கள் எழுதினீர்கள்

எங்கள் ரத்தங்களை
நீங்கள் எழுதினீர்கள்

எங்கள் கண்ணீரை
நீங்கள் எழுதினீர்கள்

எங்கள் மரணங்களை
நீங்கள் எழுதினீர்கள்

எங்கள் துயரங்களை
நீங்கள் எழுதினீர்கள்

இன்ன பிற
தேடி எழுதினீர்கள்

உங்கள் வரிகளில் வந்த
அவை எல்லாம்
பாராட்டைப் பெற்றது

பரவலாக
வரவேற்பை பெற்றது என்று
புளகாங்கிதம் கொண்டீர்கள்

பின் போய்விட்டீர்கள்
வேறு ஒன்றுக்கு

நிகழ்ச்சி நிரலில்
மாற்றம் வேண்டும்
உங்களுக்கு

இப்போது

எங்கள் வலி
கூடுதலாகி

எங்கள் ரத்தம்
உறைந்துபோய்

எங்கள் கண்ணீர்
திசைகள் இழந்து

எங்கள் மரணம்
கணக்கைத் தொலைத்து

எங்கள் துயரம்
தனிமை சேர்த்து

உலகின் கரம் நீளமானது
என்று சொன்னவர்களே
அது எங்களை நோக்கி
எப்போது நீளும்
சொல்ல முடியுமா

10 comments:

  1. அருமை என்று சொல்லிவிட முடியாத வலியின் கவிதையிது.
    நீண்ட அந்த கரத்தில் ரத்த வாடை அடிக்கிறது ராஜா

    ReplyDelete
  2. //அருமை என்று சொல்லிவிட முடியாத வலியின் கவிதையிது//

    :(

    ReplyDelete
  3. இவ்வளோ வார்த்தைகள்... இப்போதான் முதல் முறை உங்கள் கவிதைகளில் பார்க்கிறேன்.

    ரொம்ப 'வலி'மை..

    அகதி கதி அக கதி திகதி அகதி
    (the state of refugee's heart remains same ever)

    ReplyDelete
  4. உங்கள் ஸ்டைலில் இல்லாத கவிதை இது...ஆனாலும் ஒரு கவிதையின் பணியைச் செவ்வனே செய்து முடித்திருக்கிறது. வாழ்த்துகள்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  5. பேசுவதும் எழுதுவதுமாய் மட்டுமே கடந்து சென்று விடுகிறோம். வலிகள் வலிகளாகவே நீண்டு கொண்டிருப்பதுதான் வேதனை ராஜா.

    ReplyDelete
  6. நன்றி சேரல்,கல்யாணி.

    ReplyDelete