Sunday, May 23, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

98-

தோன்றுவதில்
எனக்கும் சில
தோன்றுகிறது

எது சரி

தோன்றுவதா
தோன்றியதா

99-

உன் உள்ளொளி
இருளென்றது
இருள்

உன் உள்ளிருள்
ஒளியென்றது
ஒளி

100-

அன்பு மட்டுமே
என்னிடம் இருக்கிறது
எவ்வளவு தூரம் போகலாம்

நீங்கள் பாக்கியவான்
உங்கள் அன்பு முன்
உலகம் ஒரு கைக்குட்டை
நீங்கள் வெகுசுலபமாய்
சுருட்டி விடலாம்
அல்லது வெகுவேகமாய்
கடந்து விடலாம்

7 comments:

  1. நன்றி D.R.அசோக்,இரசிகை.

    ReplyDelete
  2. எப்போதும் போலவே அழகு...

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ராஜா. அன்பினை குறித்த எளிமையானதும் வலிமையானதுமான வரிகள் மிக அழகு.

    ReplyDelete