93-
எப்போதும் பயணிப்பவன்
பார்த்துக் கொண்டிருப்பான்
திசைகளை மணிகளாக
94-
இரவு நகர்கிறது
எறும்பு போல
கனவின் மீது
95-
பசியால் திருடியவனை
அடைத்தார்கள்
தப்பித்துப் போனான்
பசியால்
96-
தந்தது எதையும்
கேட்பதில்லை உலகம்
உலகம் போல்
உள்ளம் வேண்டும்
97-
கூண்டிலிருந்த பறவை
வெளியேறி விட்டது
கூண்டிற்கு
சுதந்திரம் கிடைத்து விட்டது
நல்ல கவிதைகள்
ReplyDeleteரசித்தேன்
ithu 100 aanathum ithai oru thokuppaaka veliyidungal:)
ReplyDeletevaazhthukkal!!
நன்றி வேலு,இரசிகை.
ReplyDeleteஎப்படி சில வரிகளில் உலகம் எழுதும் அமைப்பு கிட்டுகிறது. அருமை.
ReplyDeleteungaloda ella kavithaikulum romba virumbi padikkiren .mikavum arumai
ReplyDeletethanks radhakrishnan,taotzu
ReplyDelete