Tuesday, May 04, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

81-

என்னை அடுக்குகையில்
பலவீனமானவர்கள்
கலைந்து போனார்கள்
பலமானவர்கள்
இணைந்து போனார்கள்

82-

வெளியே வந்தவன்
மெல்ல அழிக்கிறான்
சிறை பிம்பத்தை

83-

சுவாசிக்கையில்
சிறைபடும்
சுதந்திர காற்று

84-

உள் சிந்தி
ரத்தம் கலக்கும்
ஒளித்து வைத்த கண்ணீர்

85-
உழைத்து முடித்தவன்
தன் வியர்வையை
பார்த்துச் சொன்னான்
ஏன் சோம்பேறித்தனமாக
உருள்கிறாய்
வேகமாய்ப் போ

86-

தூண்டிலில் மாட்டிய மீன்
இறந்து கொண்டிருந்தது
இறப்பது தெரியாமல்

2 comments:

  1. yellaame supreb....

    //
    சுவாசிக்கையில்
    சிறைபடும்
    சுதந்திர காற்று


    உள் சிந்தி
    ரத்தம் கலக்கும்
    ஒளித்து வைத்த கண்ணீர்
    //

    ithu 2 m remba remba pidichchurukku...

    "kaattrikkum viduthalai..
    udaiyum neer kumizhi!"

    ithu naan kirukkinathu:)

    ReplyDelete
  2. //உள் சிந்திரத்தம் கலக்கும்ஒளித்து வைத்த கண்ணீர்//

    உணர்வுகளை ஒளித்து வைப்பது உயிரினை வதைக்கத்தான் செய்கிறது.

    ReplyDelete