இந்த பள்ளத்தாக்கில்
பனிமூடி இருக்கிறது
கை நீந்திப் பார்க்க
பூக்கள் சிக்குகின்றன
ஒரு பூவிலிருந்து
பட்டாம்பூச்சி பறந்தோடுகிறது
பிஞ்சு ஒளியை அசைத்தபடி
உள்ளிழுக்கும் மூச்சுக்கு
கிடைக்கின்றன
வனத்தின் வாசனைகள்
பழக்கமாகிவிட்டது
பள்ளத்தாக்கு
பள்ளத்தாக்கின் பெயரை
உரக்கச்சொல்லி
மலைகளுக்கு
அறிமுகப்படுத்த வேண்டும்
இதற்கு ஒரு
பெயர் வேண்டும்
நல்ல பெயராக
நழுவி மறைகின்றன
பெயர்கள்
கிடைக்காமலாப் போகும்
ஒரு நாள்
super
ReplyDeleteநினைவுக்கு வராமல் போன பெயர்ப்பட்டியல்...
ReplyDeleteபெயரில்லாத ஆனால் நினைவுகளில் பல உணர்வுகளை மீட்டெடுக்கும் ஓரிடம். கற்பனை நன்றாக இருக்கிறது.
ReplyDeletemind blowing
ReplyDeleteஇந்தப் பள்ளத்தாக்கு
ReplyDeleteஅவளாகவே இருக்கக் கூடும்
அவள்
எல்லா இரகசியங்களையும்
மௌனமாய் கொண்ட
கடல் போன்றவள்
அபிலாசைகள் தெறிக்கும்
விழிகள் உடையவள் என்பதால்
அலைகள் போன்றவளும் ஆகிறாள்
அலைகள் மோதி மோதி
நிறமாறிய பாறைகள்
கொண்ட பெயரற்ற பள்ளத்தாக்கிற்கு
அவள் பெயரையே சூட்டலாம்
பள்ளத்தாக்கு எதிரொலித்து
பெயரற்றவள் பேரைச்
சொல்லும் போது.
நன்றி கலாநேசன்,செந்தில்,சாய்ராம்,சீடி,
ReplyDeleteவிதூஷ்.