Monday, November 15, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

235-

பிடிபடவே
தப்பித்தேன்
பிடிபடவும்
தப்பித்தேன்

236-

இரவின் பரணையில்
புணரும்
கனவுகள்

237--

ஓயாது குடித்தோம்
ஓய்ந்து போனோம்
ஆனாலும் பேசினர்
எனது நானும்
அவனது அவனும்

238-

நீ மெளனத்தின்
எந்த புள்ளியில்
இருக்கிறாய்

சின்னத் திருத்தம்
நான் மெளனத்தின்
புள்ளியாக இருக்கிறேன்

239-

நீ படிமமா
குறியீடா

நான் குறியீட்டின்
படிமம்

படிமத்தின்
குறியீடு

240-

வேண்டாத சொற்களைத்
தவிர்த்துப் பார்த்தேன்
சொற்களின் கடைசியில்
என்னையும் பார்த்தேன்

241-

எதுவுமில்லாதிருப்பதே
இருப்பதில் இருக்கும்
விஷேசம்

3 comments:

  1. //சின்னத் திருத்தம்
    நான் மெளனத்தின்
    புள்ளியாக இருக்கிறேன்//

    எல்லாமே பிடிச்சிருக்கு..........இந்த வரி ரொம்ப பிடிச்சிருக்கு.....வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  2. // எதுவுமில்லாதிருப்பதே
    இருப்பதில் இருக்கும்
    விஷேசம் //

    ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete