கடலின் மேற்பரப்பில்
அமர இடம் தேடி
பறக்கிறது
ஒரு சிறு பறவை
பாவமாக இருந்தது
பின்னொரு நாள்
ஒரு மீன்குஞ்சிடம்
பேசிக்கொண்டிருந்தபோது
கவலையுடன் சொன்னேன்
அந்த பறவைப் பற்றி
நான்தான்
அந்த பறவை
அமர இடம் கிடைக்காததால்
மீனாகி
நீந்திக்கொண்டிருக்கிறேன்
எனச் சொல்லி
நீரைப் புன்னகைக்க வைத்தபடியே
மறைந்து போனது
இப்போது பார்க்க
கடலின் மேல்
எதுவுமில்லை
நடந்த போது
மனதின் இதத்தைப் போல
தொடங்கியது
மழை
அற்புதம்:)
ReplyDeletea real feel good..
ReplyDeleteநன்றி வானம்பாடி,கோபிகிரிஷ்.
ReplyDeleteரொம்ப பிடிச்சிருக்குங்க.
ReplyDeleteசூப்பர் சார்...
ReplyDelete