Tuesday, November 09, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

228-

நகர்ந்து
நகர்ந்து

வந்து சேர்ந்த
இடத்திலிருந்து

நகர்ந்து
நகர்ந்து

நகர்ந்து
நகர்ந்து

சென்று சேர்ந்த
இடம் நகர்த்த

நகர்ந்து
நகர்ந்து

தொடர்ந்து
தொடர்ந்து

நகர்ந்து
நகர்ந்து

229-

கவிதைக்கு
வந்து சேராத வார்த்தையை
சிலுவையில் அறைந்தேன்

கசிந்த ரத்தத்தில்
என் வன்மம் அறிந்தேன்

230-

காலத்திலிருந்து
நீ எவ்வளவு கறப்பாய்
கேட்கிறது
வைக்கோல் கன்றுக்குட்டி

231-

நான் இல்லை
என்கிற இல்லையில்
இல்லாமல் இல்லை நான்

3 comments:

  1. நான் இல்லை
    என்கிற இல்லையில்
    இல்லாமல் இல்லை நான்

    remba pidichurukku......:)

    ReplyDelete
  2. நல்லா இருந்தது சார். ‘நான் இல்லை’
    //கவிதைக்கு
    வந்து சேராத வார்த்தையை
    சிலுவையில் அறைந்தேன்

    கசிந்த ரத்தத்தில்
    என் வன்மம் அறிந்தேன்//
    நான் முன்பொரு முறை ட்விட்டரில் இதுபோல்தான் ஒன்று எழுதியிருந்தேன்.
    என்னை மனதில் வைத்து.
    ‘கவிதை என்ற பெயரில் எதுவும் கிறுக்காமலிருக்கலாம். கற்பனையென்ற பெயரில் வன்மமாவது தலை தூக்காமலிருக்கும்.#சுயம்’ :)

    ReplyDelete
  3. 231.
    இப்படி பல சமயம் நானும் நினைப்பதுண்டு. நல்லா இருக்கு ராஜா சார்.

    ReplyDelete