கப்பல்கள்
வழி தெரியாமல்
இருளில் நிற்கின்றன என்றேன்
தேவதை சிரிப்புடன்
பார்த்த சிறுமி
நோட்டை எடுத்து
கலங்கரை விளக்கை
வரைந்தாள்
கப்பல்கள்
ஒளி பெற்று
வழி பார்த்துப் புறப்பட்டன
பின் ஓவிய நோட்டை மூடி
பையில் வைத்து
பள்ளிக்கூடம் போனாள்
அவளுக்குத் தெரியாமல்
அவளைத் தொடர்ந்தன
கப்பல்களும்
குழந்தைகள் போலவே கவிதையும் அவ்வளவு அழகு!
ReplyDeleteஅழகு.
ReplyDeleteமிகவும் அருமை ரசித்தேன்
ReplyDeleteஒரு சின்னஞ்சிறு தேவதையின் பின்னாடி கப்பல்கள் அணிவகுத்து போகும் காட்சி கண்ணுக்குள்ள விரியுதுங்க. Superb Raajaa. :)
ReplyDeleteungal thuligalial silirthen nanaiyamudiyavillai thulasi
ReplyDeleteஅருமையான கவிதை. மிகவும் ரசித்தேன் நண்பரே.
ReplyDeleteattakaasam... R
ReplyDelete