அடிக்கடி குழந்தை கேட்பாள்
இந்த மீன் தொட்டி மீன்களை
கடலில் விட்டுவிடலாமா என்று
கடல் மீன்களின் தாய்வீடு
மீன்களின் நீர் விளையாட்டுத் திடல்
என்று அவளுக்கு
கதை சொல்லும் போது
குறிப்பிட்டது
அப்படியே தங்கிவிட
ஒரு நாள் கேட்டாள்
மீன் தொட்டியில
நகர்ந்து போவுது
கடல்ல விட்டா
ஓடும் இல்ல
அவள் விருப்பப்படியே
முடிவு செய்து
கவனமாய் கொண்டுபோய்
மீன் தொட்டியை
கரையில் வைத்து
எல்லா மீன்களையும்
வழி அனுப்பி வைத்தோம்
ரொம்ப தூரம் போயி
விளையாடுங்க எனச்சொல்லி
குதித்தபடியே கடலுக்கு
கையசைத்தாள் குழந்தை
அலை பதிலுக்கு
தலை அசைத்தது
மீன் தொட்டியில்
நிரம்பி இருந்தது
கடலின் நன்றி
வாழ்த்துகள் அருமையான கவிதைக்கு .
ReplyDeleteநன்றி சூர்யா.
ReplyDelete//மீன் தொட்டியில்
ReplyDeleteநிரம்பி இருந்தது
கடலின் நன்றி//
Nice lines Raajaa.