Monday, June 07, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

111-

புதிய கண்ணீர்
பழைய வலிகள்
இதற்குத் தெரியாது

112-

நான்கள்
முன்னாலும் பின்னாலும்
வரிசையில் நான்

113-

மரணம் போல்
வாழ வேண்டும்
அமைதியாக

114-

எலும்புக்கூட்டை
சுடுகிறது குழந்தை
வெளியேறுகிறது உயிர்
துப்பாக்கியிலிருந்து

115-

யாருமில்லை
கனவில் நிலவுகளை
கொட்டும் இரவு

4 comments:

  1. //யாருமில்லை
    கனவில் நிலவுகளை
    கொட்டும் இரவு //

    Fantastic Sir!

    ReplyDelete
  2. //யாருமில்லை
    கனவில் நிலவுகளை
    கொட்டும் இரவு//

    அந்த தனிமை சுகம்ங்க.

    ReplyDelete