Monday, January 02, 2012

ஒத்த புன்னகை

உன்னிடம் தர
ஒன்றுமில்லை என்கிறேன்

நீ அந்த வாக்கியத்தை
கண்கள் மலர
வாங்கிக் கொள்கிறாய்

நான் நிறைய
தந்தது போலிருக்கிறது

நீ நிறைய
பெற்றுக்கொண்டது போலிருக்கிறது

நம் ஒத்த புன்னகையில்
இந்தப் பொருள்
வராமல் இல்லை

1 comment:

  1. நான் நிறைய
    தந்தது போலிருக்கிறது

    நீ நிறைய
    பெற்றுக்கொண்டது போலிருக்கிறது
    என்ன அழகு தருவதிலும் பெறுவதிலும் .

    ReplyDelete