811-
நான் தயாரித்த 
கண்ணாடி எனினும் 
இருப்பதுபோல்தான் 
என்னையும் காட்டும்
812-
நகர்த்த நகர்த்த 
நகர்வது 
வேகமாகும்
813-
நடிக்கத் தெரியாத 
வார்த்தைகள் 
வரும்
ஒத்திகையின்றி 
814-
நடந்த கதை 
நடக்கும் கதை 
நடக்கப்போகும் கதை 
மூன்றிலும் 
காலம் எப்போதும் 
கதாபாத்திரமாய்
815-
கண்ணீர் துளி 
அருகில் செவி 
உற்றுக் கேட்க 
கடலின் ஒலி
816-
நான் 
இருக்கிறேன்
 
 
ஒவ்வொரு வரியும் தத்துவங்களை தாங்கி நிற்கின்றன
ReplyDelete