பக்கங்கள்
மாற்றிப் படித்த கதையில்
இன்னொரு புத்தகம்
------
முதியவர் வீடு
காற்றில் ஆடுகிறது
தேதி கிழிக்காத காலண்டர்
------
தொலைந்து போனதுண்டா
நீங்கள் உங்களில்
தொலைந்து போனதுண்டா
-------
அடை மழை
மூடிய கோயில்
கடவுளும் நானும்
மழைத்துளிகளை எண்ணியபடி
-------
விற்காத பொம்மை மீது
எடுத்துப் பார்த்தவர்களின்
விரல் ரேகைகள்
/விற்காத பொம்மை மீது
ReplyDeleteஎடுத்துப் பார்த்தவர்களின்
விரல் ரேகைகள் /
இது அசத்தல்!
காட்சிகளாக நீளும் வார்த்தைகள்! அந்த காட்சிகளின் ஊடாக மிதந்து வரும் உணர்வலைகள்!
ReplyDeletesharp eyes to notice everyone around. :) loved each of them.
ReplyDeleteநன்றி அன்புடன் அருணா,சாய்ராம்,விதூஷ்.
ReplyDeleteaththanaiyum azhagu...!
ReplyDelete//
பக்கங்கள்
மாற்றிப் படித்த கதையில்
இன்னொரு புத்தகம்
//
!
கவிதைகள் அருமை.. :-))
ReplyDeleteநன்றி இரசிகை,ராகவ்.
ReplyDeleteகாற்றில் படபடக்கும் தாள்கள் சொல்கின்றன தனிமையின் வலியை.
ReplyDeleteஇந்த ஞாயிறு பொக்கிஷமாய் ஆகப்போகிறது.உங்கள் கவிதைகள் எல்லாம் படித்து
ReplyDeleteஅது சரி மழையின் கடவுள் ஏதும் கூறவில்லையா
பக்கங்கள்
ReplyDeleteமாற்றிப் படித்த கதையில்
இன்னொரு புத்தகம் - fantastic...
nice...
ReplyDelete