நெருங்கிவிட்ட வீடு
குடிகாரனின் கால்கள்
குழப்பத்தில்
--
கவனமாக காலடி வைக்கிறேன்
குழந்தைகளின்
மழை கப்பல்கள்
--
பட்டாம்பூச்சி பிடிக்கிறது குழந்தை
இல்லை இல்லை
பட்டாம்பூச்சி பிடிக்கிறது பட்டாம்பூச்சி
--
கனவில்
தூங்குவதை தடுக்க
எழுகிறான் போராளி
--
நள்ளிரவு
காரில் ஆடும் பொம்மை
ஓட்டுனருடன் பேசிக்கொண்டு
--
பழைய நண்பர்கள்
காலங்களைக் கோர்க்கிறார்கள்
பார்க் பெஞ்சில்
--
//பட்டாம்பூச்சி பிடிக்கிறது குழந்தை
ReplyDeleteஇல்லை இல்லை
பட்டாம்பூச்சி பிடிக்கிறது பட்டாம்பூச்சி//
மலர்கள் நிறைந்த தோட்டத்தில், ஓடியாடும் மலராக ஒரு சிறுமி பட்டாம்பூச்சியை துரத்துவது கண்ணில் வந்து போகிறது ராஜா.
I love this poem my friend.
//பழைய நண்பர்கள்
ReplyDeleteகாலங்களைக் கோர்க்கிறார்கள்
பார்க் பெஞ்சில்//
எளிமையாகவும் அருமையாகவும் கோர்த்திருக்கிறீர்கள்.... அத்தனை கவிதைகளும் அருமை!!!
நன்றி கல்யாணி,கவிதன்.
ReplyDeleteyellaame azhaku...nga:)
ReplyDeletepommai...veru nice!
நள்ளிரவு
ReplyDeleteகாரில் ஆடும் பொம்மை
ஓட்டுனருடன் பேசிக்கொண்டு
அமானுஷ்யமாய்
நன்றி இரசிகை,பத்மா.
ReplyDelete