Wednesday, April 07, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

66-

என்னிலிருந்து
என்னைப் பிடுங்கி
என்னில் நடுகிறேன்

67-

கண் மூடி
நான் பார்த்த மெளனமும்
கண் திறந்து
என்னைப் பார்த்த மெளனமும்
வேறுவேறாகவும்
ஒன்றாகவும்

68-

ஒரு வரியை
திரும்ப திரும்ப எழுத
அந்த ஒரே வரி
மாறிக்கொண்டிருக்கிறது
புது புது
வரிகளாக

69-

நீங்கள் புன்னகைத்தபின்
காண முடிந்தது
உங்கள்
முகத்தின் கசப்பை

4 comments:

  1. கவிதைகளை கூரிய வார்த்தைகளால் வெகு நேர்த்தியாக செதுக்கியிருக்கிறீர்கள்....

    அற்புதம்....

    ReplyDelete
  2. என்னிலிருந்து
    என்னைப் பிடுங்கி
    என்னில் நடுகிறேன்

    அதிலிருந்து நான் வளர்ந்தேன் ....

    ReplyDelete
  3. கண் மூடி
    நான் பார்த்த மெளனமும்
    கண் திறந்து
    என்னைப் பார்த்த மெளனமும்
    வேறுவேறாகவும்
    ஒன்றாகவும்

    ஆக இரண்டும் மௌனம் தான்

    ReplyDelete